ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா: பணியாளர்கள் வேலைநிறுத்தம்

மதுரை: நினைத்த நேரத்தில் ஒவ்வொரு துறையில் இருந்தும் கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையின் கீழ் மட்டும் ரேஷன் கடைகளை ஒரே துறையாக சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசு நியாயவிலை (ரேஷன்) கடை பணியாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக நேற்று மாநிலம் முழுவதிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்த நிலையில் 3ம் நாளாக (இன்று)கலெக்டரிடம் மனு கொடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
கூட்டுறவுத் துறையின் கீழ் தான் பணிநியமனம், சம்பளம் பெறுகிறோம். ஆனால் ஊராட்சி தலைவரில் தொடங்கி டி.ஆர்.ஓ., டி.எஸ்.ஓ., நுகர்வோர் பாதுகாப்புத்துறை என 16 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நினைத்த நேரத்தில் ஆய்வுக்கு வருகின்றனர். இதனால் எங்களின் பணிச்சுமை அதிகரிப்பதுடன் மனஅழுத்தம் ஏற்படுகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.
கோடவுனிலும் தராசு வேண்டும்:
ரேஷன் கடைகளில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் அரிசி, பருப்பு, சீனி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக கோடவுனிலும் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து சரியான எடையில் மூடைகள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் குறைந்தது இரண்டு பேர் கைரேகை வைக்க வருவதே இல்லை. குழந்தைகளின் கைரேகைகள் முழுமையாக பதிவாகாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கார்டுக்கும் கூடுதல் நேரமாகிறது. 70 சதவீதம் பேரிடம் கைரேகை பெற்றுள்ளோம். அதை 40 சதவீத அளவு இருந்தால் போதும் என்ற நிலைக்கு மாற்றினால் கைரேகையால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும்.
சோதனை அடிப்படையில் திண்டுக்கல், துாத்துக்குடி ரேஷன் கடைகளில் கார்டுதாரர் வாங்கும் அரிசி, பருப்பு என ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு முறை கைரேகை வைத்து பதியும் முறை செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு மணி நேரத்தில் 3 பேருக்கு மட்டுமே பொருட்களை வழங்க முடிகிறது. கார்டுதாரர்கள் நீண்டநேரம் காக்க வைக்கப்படுவதாக தகராறு செய்வதால் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் குறித்து கூட்டுறவுத்துறை பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏப். 27 ல் திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.
மேலும்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!