கள்ளச்சாராயம்; 2 பேர் கைது

மேட்டுப்பாளையம்,; காரமடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற இரண்டு கேரள மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பில்லூர் டேம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பில்லூர் டேம் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த இரண்டு நபர்களை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மருதன், 34 மற்றும் மற்றொரு மருதன், 28 என தெரியவந்தது. இவர்கள் குந்தா ஆற்றின் கரையோரம் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் சாராய பொருட்களை ஊற வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காரமடை போலீசார் கைது செய்து, 30 லிட்டர் கள்ளச்சாரயம் காய்ச்ச பயன்படுத்தும் ஊறலை பறிமுதல் செய்தனர்.-

Advertisement