ராமானுஜர் ஜெயந்தி விழா

அன்னுார், ; அன்னுார் பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி விழா வரும் மே 2ம் தேதி நடக்கிறது.

வைணவத்தை அழிவிலிருந்து காப்பாற்றி, உலகெங்கும் தழைக்க வைத்து இந்து சமய வரலாற்றில் இடம் பிடித்தவர் ராமானுஜர். அவர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் மே 2ம் தேதி அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் விழா நடைபெறுகிறது.

காலை 6:30 மணிக்கு, விஸ்வக்சேனா ஆராதனை, புண்யா வாசனம், ஹோமம் நடக்கிறது. 'காரேய் கருணை ராமானுஜா,' என்னும் தலைப்பில் (பணி நிறைவு) ஆசிரியர் செந்தில்குமார் பேசுகிறார். இதையடுத்து, ராமானுஜருக்கு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. சாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement