மஞ்சுநாத் மனைவி பல்லவிக்கு 103 வயது மூதாட்டி ஆறுதல்

ஷிவமொக்கா: 'ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மஞ்சுநராத் ராவ் வீட்டுக்கு சென்று அவர் குடும்பத்தினருக்கு, 103 வயது மூதாட்டி ஆறுதல் கூறினார்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கர்நாடகாவை சேர்ந்தவர்கள் குறித்த செய்திகள், 'டிவி'க்களில் தினமும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதை பார்த்த துமகூரு மாவட்டம், திப்டூரின் திம்லாபுராவை சேர்ந்த சிவம்மா, 103, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற நினைத்தார்.

தன் விருப்பத்தை தன் குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் பாட்டியுடன் ஷிவமொக்காவுக்கு நேற்று சென்றனர். மஞ்சுநாத் ராவ் மனைவி, மகன், குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின், மூதாட்டி சிவம்மா கூறுகையில், ''பாகிஸ்தானியர்களை விட்டு விடக்கூடாது. அவர்கள் அழிக்கப்பட வேண்டும். ஹிந்துக்களை தாக்கிய அவர்கள் எங்கிருந்தாலும், நம் வீரர்கள் விடக்கூடாது. அவர்களை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். நம் நாடு நன்றாக இருக்க வேண்டும்,'' என்றார்.

மஞ்சுநாத் மனைவி பல்லவி கூறுகையில், ''நான், என் வீட்டு வாசலில் நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோவில் வந்த மூதாட்டியிடம் யார் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், என்னிடம் பேச வந்ததாக கூறினார். 103 வயதில் துமகூரில் இருந்து என்னை பார்க்க வந்தது எனக்கு தைரியம் அளிக்கிறது. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

Advertisement