'டயாலிசிஸ்' நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு
சென்னை: ''அரசு மருத்துவமனைகளுக்கு, டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, விரைவில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அவர் கூறியதாவது:
சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளாகி, ரத்த சுத்திகரிப்பு என்ற, 'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோரின் நலனுக்காக, பல்வேறு அறிவிப்புகள் சட்டசபையில் வெளியிடப்பட்டன.
அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், டயாலிசிஸ் சிகிச்சை சேவை, தனியார் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் விரைவில் துவங்கப்படும்.
அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, 150 மி.லி., பால்; இரண்டு வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு, 50 கிராம் சுண்டல், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ள மூன்று பிஸ்கட்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஈஷா மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய 'காய்கறி சாகுபடி' கருத்தரங்கம்
-
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை
-
தமிழ் மொழியை கற்றுத்தரும் ஈஷா
-
வாழ்வின் மாயாஜாலம் உணர..
-
தி.மு.க.,வை வீழ்த்த போடும் மனக்கணக்கு தப்புக்கணக்காக முடியும்; முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு