ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிராமண சமாஜம் ஆதரவு

பழநி,: மத்திய அரசு நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்ததை வரவேற்பதாக தமிழ்நாடு பிராமண சமாஜ நிறுவனத் தலைவர் ஹரிஹர முத்தய்யர் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: ஜாதி வாரி கணக்கெடுப்பு அனைத்து சமூகங்களின் சமூக பொருளாதார நிலைமைகளை புரிந்து கொள்ள, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் நலனுக்காக உள்ளடங்கிய கொள்கைகளை உருவாக்க ஒரு குறிப்பிடத்தக்க பணியாகும். சமூக நீதியை மேம்படுத்த, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த, மதிப்பு மிக்க தரவுகளை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். பிராமண சமூகம் எப்போதும் கல்வி, சமூக நல்லிணக்கம், முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நியாயமான பாரபட்சமற்ற, நுணுக்கமான முறையில் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆலோசனை உடன் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்தும் கொள்கைகளை வடிவமைக்க இந்த கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முக்கியமான முயற்சியில் அரசிற்கு எங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement