போரின் போது உயிர் தப்புவது எப்படி; ஜம்மு பள்ளிகளில் மாணவர்களுக்கு விசேஷ பயிற்சி

ஸ்ரீநகர்: போர்க்கால சூழலின் போது, எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஜம்முவில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
பஹல்காம் சம்பவம் எதிரொலியாக, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன. எல்லையில் 12வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறி சிறிய அளவிலான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மொத்தம் 259 இடங்களில் நடத்தப்படும் என்றும், எங்கு நடைபெறும் என்ற பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந் நிலையில் ஜம்முவில் உள்ள பள்ளிகளில் போர்க்கால சூழல் அல்லது போரின் போது எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து செயல்முறை பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, வகுப்பறைகளில் மாணவிகள் அமர்ந்திருக்கும்போது வானில் சைரன்கள் ஒலிப்பது போன்ற சத்தங்கள் எழுப்பப்படுகிறது.
அதன் பின்னர், மாணவிகள் அனைவரும் காதுகளை இரு கைகளால் பொத்திக் கொண்டு, மேஜைகளின் அடியில் பாதுகாப்புடன் குனிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிறகு, ஒவ்வொருவரும் வரிசையாக வகுப்பறைகளில் இருந்து காதுகளை பொத்தியவாறே பாதுகாப்பான இடத்தை நோக்கி குனிந்த படியே செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது.
அதன்படியே, மாணவிகள் ஒவ்வொருவரும் செயல்பட்டு அந்த வழிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று தற்காத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



மேலும்
-
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்த உத்தரவு
-
1971ல் சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள்: பாக்., ராணுவ தளபதிக்கு பலுாச் தலைவர் பதிலடி
-
காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை
-
ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த ஆபரண தங்கம் விலை
-
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்: விமான சேவையை நிறுத்தியது ரஷ்யா
-
மின்னல், பலத்த காற்றுடன் மழை: குஜராத்தில் 14 பேர் உயிரிழப்பு