ரேஷனில் தரமில்லாத அரிசி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார், கண்ணாடி மில் தெருவில் உள்ள ரேஷன் கடையில், தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம் செய்வதாக புகார் எழுந்தது. நேற்று, ஆத்துார் அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, பொதுமக்கள், 'சில மாதங்களாக, இங்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் துர்நாற்றம் வீசுகிறது. அதை சமைக்கும்போது நுரை நுரையாக வருகிறது. தரமான அரிசி வழங்க வேண்டும்' என, எம்.எல்.ஏ.,விடம் கூறினர்.
ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியுடன், பொதுமக்களுடன் சேர்ந்து, ஆத்துார் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கடையில் வழங்கப்பட்ட அரிசியை, கிடங்கு மேற்பார்வை அலுவலர் ஞானசேகரனிடம் காண்பித்து, தரமற்ற அரிசி குறித்து கேள்வி எழுப்பினார்.
அலுவலர்கள், 'பாலிஷ் குறைவாக உள்ள அரிசியாக இருந்துள்ளது. அந்த ரேஷன் கடைக்கு, 250 கிலோ மாற்று அரிசி வழங்கப்படும். இதுபோன்ற புகார் எழாமல் பொருட்கள் வழங்கப்படும்' என்றனர்.
மேலும்
-
ஈஷா மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய 'காய்கறி சாகுபடி' கருத்தரங்கம்
-
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை
-
தமிழ் மொழியை கற்றுத்தரும் ஈஷா
-
வாழ்வின் மாயாஜாலம் உணர..
-
தி.மு.க.,வை வீழ்த்த போடும் மனக்கணக்கு தப்புக்கணக்காக முடியும்; முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு