துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!

5

வாஷிங்டன்: துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.



உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சு நடத்தினார். இந்நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யா- உக்ரைன் போர் உட்பட பல விஷயங்கள் குறித்து துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உடன் தொலைபேசியில் பேசினேன். இருவரும் சிறப்பான பேச்சுவார்த்தை நடத்தினோம். எதிர்காலத்தில் துருக்கிக்கு வருமாறு ரெசெப் எர்டோகன் எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் அமெரிக்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன்.



நான் அதிபராக இருந்த போது, துருக்கி உடன் உறவு சிறப்பாக இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஆண்ட்ரூ பிரன்சனை அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்ப அவர் உதவினார். பல விஷயங்களில் நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம். துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement