12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு

2


சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே வெளியாக உள்ளது.



2024-2025ம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3,316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் மே, 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே வெளியாக உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதிய அனைவரும் அன்றைய தினம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement