செண்டுப்பூக்களுக்கு விலை இன்றி விவசாயிகள் கவலை

போடி: போடி பகுதியில் செண்டு பூக்கள் நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
போடி அருகே ராசிங்காபுரம், பொட்டிப்புரம், எரணம்பட்டி, மறவபட்டி, மீனாட்சிபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் செண்டு பூக்கள் பயிரிட்டு உள்ளனர். செண்டு பூக்கள் அதிக பனிப்பொழிவு இருந்தால் பூக்கள் கருகி விடும். பனிப்பொலிவு இல்லாத காலங்களில் நன்கு விளைச்சல் இருக்கும். இப்பூக்கள் மாலை கட்டுவதற்கு மட்டுமே பயன்படும். செண்டு பூக்கள் கடந்த ஆண்டு சீசனில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை இருந்தது.
இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளது. 10 நாட்களுக்கு முன் கிலோ ரூ. 35 முதல் ரூ.40 வரை விலை போனது. கடந்த 3 நாட்களாக கிலோ ரூ. 15 முதல் ரூ.20 ஆக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
'விதைப்பு, மருந்தடிப்பு, பூக்கள் எடுப்புக்கு கூட விலை கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டு உள்ளது,' என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு
-
பாக்., மீது நடந்த தாக்குதல்: வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்
-
சென்னை பவுலிங்; கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உர்வில் படேல்!
-
பி.டி.12 யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு
-
பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: ஏற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள்