கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி: கேரளாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தென்மேற்கு பருவமழையானது வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். கோடை காலத்தின் போது தொடங்கும் இந்த மழை மீது எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும்.


இந் நிலையில் கேரளாவில் மே 27ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த மழையானது வழக்கமாக ஜூன் 1ல் தொடங்கும். ஆனால் இம்முறை முன்கூட்டியே தொடங்குகிறது. இதன் மூலம் இந்தாண்டு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.

Advertisement