ஆலங்குடி, திட்டையில் குருபெயர்ச்சி விழா விமரிசை

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், தனி சன்னிதியில், குருபகவான் அருள்பாலிக்கிறார்.

நேற்று மதியம், 1:19 மணிக்கு, ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். குருபெயர்ச்சி அடைந்தவுடன், மகாதீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தஞ்சாவூர் அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குருபாகவனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

குருபெயர்ச்சியின் தொடர்ச்சியாக, மே 23ம் தேதி லட்சார்ச்சனையும், 24, 25ம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெற உள்ளது.

Advertisement