புகார் பெட்டி குப்பையில் மருத்துவ கழிவால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் மாநகராட்சி, யாகசாலை மண்டபம் பின் தெரு வழியாக அமுதுபடி தெரு, வேகவதி நதி சாலை, சுண்ணாம்புகார தெரு, சித்திவிநாயகர் பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மின் மாற்றி அருகில், அப்பகுதியினர் கொட்டும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை.

குறிப்பாக, குப்பையில் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளதால், காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.ரவிகுமார்,

காஞ்சிபுரம்.

Advertisement