கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கரூர் :கரூர் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 54; இவர் நேற்று முன்தினம், வெள்ளியணை மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று
கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளியணை கணபதி நகரை சேர்ந்த மணிரத்தினம், 27; என்பவர், தங்கவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி, மது குடிக்க, 500 ரூபாயை பறித்துள்ளார்.இது குறித்து, தங்கவேல் அளித்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார், மணிரத்தினத்தை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement