ராமேஸ்வரம் - கோவை ரயில் காலஅட்டவணையில் திருத்தம்
கோவை, ; ராமேஸ்வரம் - கோவை இடையேயான ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை - ராமேஸ்வரம்(16618) மற்றும் ராமேஸ்வரம் - கோவை(16617) இடையே வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராமேஸ்வரம் - கோவை இடையேயான ரயிலின் கால அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து, இரவு 7:30 மணிக்கு பதில், இரவு 7:55 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, இரவு 7:54 மணிக்கு பதில், இரவு 8:20 மணி, ராமநாதபுரத்துக்கு இரவு 8:20 மணிக்கு பதில், இரவு 8:43மணி, காரைக்குடிக்கு இரவு 10:33 மணிக்கு பதில் இரவு 10:53 மணி, புதுக்கோட்டைக்கு இரவு 9:03 மணிக்கு பதில், இரவு 9:33 மணிக்கும் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கிகளில் கல்வி கடன் பெறுவதில் சிக்கல்; உயர்கல்வியிலும் அதிகரிக்கிறது இடைநிற்றல்
-
ஈசனை தரிசிக்க வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள்
-
தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்: ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் முன்னிலையில் நடந்தது
-
மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு
-
குருபூஜை விழா
-
இன்றைய நிகழ்ச்சி (மே 13)
Advertisement
Advertisement