சித்ரா பவுர்ணமி வழிபாடு திண்டுக்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநிரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.காலணி வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
சித்ரா பவுர்ணமி என்பதால் சிறப்பு விளக்கு பூஜை, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிேஷகம் நடந்தது. தாடிகொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
வடமதுரை: சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் 75ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று துவங்கியது.
கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி பால்கேணி சென்று மண்டூக முனிவருக்கு வரமளித்தார். இதை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருள பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நாளை (மே 14) இரவு வரை நடைபெறும். மே 15 காலை சுவாமி சன்னதி திரும்புவார்.
* பாடியூர் புதுப்பட்டி, நாட்டாண்மைகாரன்பட்டி வீருசக்தி விநாயகர், வீருதும்மம்மன் மாலைக்கோயிலில் பெருமாள் அழைப்புடன் துவங்கிய சித்ரா பவுர்ணமி விழாவில் சங்கு பூஜை, யாக வேள்வி, தீர்த்தம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன.
ஏற்பாட்டினை ஒக்கலிகர் தசிரிவார் குல தாயாதிகள் செய்திருந்தனர்.
* தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் கோயில் தலைகட்டுதாரர்கள் அவரவர் ஊர்களில் இருந்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து சன்னதிகளில் பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இங்குள்ள சமுதாய கூட திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பழனிச்சாமி பங்கேற்றனர்.
கன்னிவாடி: சோமலிங்க சுவாமி கோயிலில் பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உட்பட திரவிய அபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் விசேஷ அபிஷேகம் நடந்தது.
-வேடசந்துார் கல்வார்பட்டி ரெங்கமலை அடிவாரப் பகுதி மல்லீஸ்வரன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடந்தது.
பழநி: பழநி ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்திரகுப்த பூஜை நடந்தது. சித்திரகுப்த சுவாமிக்கு வாழை மரத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பொரிகடலை, வெல்லம், கொய்யா, வாழை, இளநீர், மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள், காய்கறிகளை படைத்தனர்.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கபட்டது. வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், வேம்பார்பட்டி வெங்கடேஷ பெருமாள் கோயில், கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், குட்டூர் அண்ணாமலையார் கோயில், அக்ரஹாரம் வாராஹி அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயிலில் கலசங்களில் புண்ணிய தீர்த்தம் கொண்டுவர வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. தீர்த்தம், பால்குடம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது.
மாலையில் மாவிளக்கு, விளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம், பூச்சொரிதல்,அன்னதானம் நடந்தது.
மேலும்
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!