குப்பை தொட்டியான கண்மாய்

அழகர்கோவில்: அழகர்கோவில் செம்பியனேந்தல் புதுப்பட்டி கண்மாய் குப்பை கழிவுகளாலும், நீர் வற்றியும், முட்செடிகளாகவும் சூழ்ந்துள்ளன.

புதுப்பட்டிஊராட்சிக்குட்பட்ட செம்பியனேந்தலில், செம்மொழி நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.நீர்வளத்துறை சார்பில் 2023ல் வாடிப்பட்டி வடக்கு பகுதி முதல் கிழக்கு வரை உள்ள பெரியாறு கால்வாய், அதன் கிளைவாய்க்கால்கள் மற்றும் இந்த கண்மாய் பகுதியையும் சீரமைத்தனர். எனினும் பராமரிப்பின்றிமோசமாக உள்ளது.

இப்பகுதி மக்களின் நீர்ஆதாரமான இக்கண்மாயை குப்பை கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். கண்மாய் வறண்டு வருவதால் தண்ணீர் தேவைக்கு ஆழ்குழாய் நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கண்மாயின் சில பகுதியில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சியும், நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement