கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் கட்டுமான தொழிலை சார்ந்த அனைத்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாநில தலைவர் பொறியாளர் ராகவன் தலைமை வகித்தார்.

மண்டல செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், சிவக்குமார், காந்தி, ஜாகிர் உசேன், கஜேந்திரன் பங்கேற்றனர். கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்திய எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், கல்குவாரிகளை அரசுடைமையாக்கி நியாயமான விலையில் கட்டுமான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்.

Advertisement