தி.மு.க., பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நுார்முகமது வரவேற்றார். கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், மகளிர் அணி துணை அமைப்பாளர் மகாதேவி முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து, தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தேர்தல் பணி குழு செயலாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் பாலு, சண்முகம், நெடுஞ்செழியன், அப்துல் கபூர், ராதாகிருஷ்ணன், அக்பர் உசேன், சிவக்குமார், பாலாஜி, அருட்செல்வன், சிலம்பரசன், கோவி முருகன், பாப்பா, ஏழுமலை உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். இளைஞரணி அமைப்பாளர் அப்போலியன் நன்றி கூறினார்.
மேலும்
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!