பெருமாள் கோவிலில் அன்னதான விழா

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாபெரும் அன்னதான விழா நடந்தது.

கச்சிராயபாளையத்தில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மலைக்கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி அன்று பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை ஒட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

நேற்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. திரளான பொதுமக்கள் முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement