துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மகன் சைமன், 25; திருமணம் ஆகவில்லை. இவர், சங்கராபுரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற சைமன் மஞ்சபுத்துார் ஆற்றங்கரையில் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சைமனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement