பாத மருத்துவ மையம் திறப்பு

சிவகங்கை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதப்புண் மற்றும் அதன் விளைவுகளை குணப்படுத்தக்கூடிய பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது.

டீன் சத்யபாமா மையத்தை திறந்து வைத்தார். அறுவை சிகிச்சை துறை தலைவர் சரவணகுமார் வரவேற்றார். துணை முதல்வர் விசாலாட்சி, கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன் பங்கேற்றனர். டாக்டர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Advertisement