அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

1

காரைக்குடி : அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை புகுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் வேலையில்லா பட்டதாரிகள் காரைக்குடியில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்எச்.ராஜாவிடம் மனு அளித்தனர்.

சங்க மாநில மகளிரணிஒருங்கிணைப்பாளர் லட்சுமி தலைமையில் நிர்வாகிகள் அவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு நடுநிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்து வருகின்றனர். மத்திய அரசின் நோக்கம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வந்து, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், அரசு பள்ளியில் அறிவியல் பாடத்திற்கென தனி பாட வேளைகள் இல்லை.

மாநில அளவில் மேல், உயர்நிலை பள்ளிகளில் 6454, நடுநிலை பள்ளிகளில் 8209 என 14,663 கணிணி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் 6454 இடங்களில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளது. உச்சநீதிமன்றம் அரசே கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தெரிவித்துஉள்ளது.

எனவே தமிழகத்தில் 60,000 பி.எட்., பட்டதாரிகளை நேரடியாக அரசு பள்ளிகளில் நியமிக்கவேண்டும் என தெரிவித்துஉள்ளனர்.

Advertisement