டூவீலரில் பதுங்கிய பாம்பு குட்டிதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

காரைக்குடி : காரைக்குடியில் ஓட்டல்முன் நிறுத்தியிருந்த டூவீலரில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

காரைக்குடி முடியரசன்சாலை ஓட்டல் முன் டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் இருந்து வெளியேறிய நல்ல பாம்பு குட்டிஒன்று, டூவீலருக்குள் புகுந்தது.

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் டூவீலர் பாகங்களை பிரித்து, அங்கு பதுங்கியிருந்த பாம்பு குட்டியை மீட்டனர்.

Advertisement