10ம் வகுப்பு தேர்வில் 93.26 சதவீதம் பேர் தேர்ச்சி 79 பள்ளிகள் 'சென்டம்'

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், 10-ம் வகுப்பு தேர்வில், 93.26 சதவீதம்; பிளஸ்-1 தேர்வில், 88.36 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரியில்,10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம், 28ம் தேதி துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடந்தது.

நேற்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொது தேர்வை, '185 பள்ளிகளை சேர்ந்த, 3,234 மாணவர்கள்; 3,461 மாணவிகள்,' என, 6,695 பேர் தேர்வு எழுதினர். அதில், '2,952 மாணவர்கள், 3,292 மாணவிகள்,' என, மொத்தம் 6,244 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள், 91.28 சதவீதம்; மாணவிகள், 95.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம், 93.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், 27-வது இடத்தை நீலகிரி பிடித்துஉள்ளது.

இது கடந்த ஆண்டை காட்டிலும், 2.65 சதவீத வெற்றி விகிதம் அதிகமாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 79 பள்ளிகள் 'சென்டம்' பெற்றுள்ளன.

பிளஸ்-1 தேர்வு முடிவு



பிளஸ்-1 பொது தேர்வை, '88 பள்ளிகளை சேர்ந்த, 3,003 மாணவர்கள்; 3441 மாணவிகள்,' என, மொத்தம், 6,444 பேர் தேர்வு எழுதினர். அதில், '2,461 மாணவர்கள்; 3,233 மாணவிகள்,' என, மொத்தம், 5,694 பேர்,' தேர்ச்சியடைந்துள்ளனர்.

'மாணவர்கள், 81.95 சதவீதமும், மாணவிகள் 93.96 சதவீதம்,' என, மொத்தம், 88.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில், 32-வது இடத்தை நீலகிரி பிடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், 3.1 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைவாகும்.

Advertisement