இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத : “இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் இருதரப்பும் அமர்ந்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. இதன் வாயிலாக, இருதரப்பும் எதுவும் பயனடையவில்லை. எனவே, அண்டை வீட்டார் போல் அமைதியான முறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகளை அமர்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேசி தீர்க்க வேண்டும்.
பாகிஸ்தான், அமைதியான நாடு. எனினும், நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குரிய பதிலடியை ராணுவம் வாயிலாக அளிப்போம்.
இந்தியாவின் தாக்குதலை எதிர்த்து, நம் நாட்டின் படைவீரர்களும், ஒட்டுமொத்த தேசமும் போரிட்ட விதம் ஒப்பற்றது. நம் நாட்டின் ராணுவ வரலாற்றில் இது ஒரு பொன்னான அத்தியாயம்.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவினால், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி