மவுண்ட் சீயோன் பள்ளி சாதனை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி ஜெனிபா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சாதனை புரிந்துள்ளார். இப்பள்ளியில் 400க்கு மேல் 13 பேர் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர்.

சாதனை புரிந்த மாணவர்களை தாளாளர் நோரிஸ் நடராஜன், செயலாளர் லின்னி, முதல்வர் ஆத்தியப்பன், பெற்றோர் சுந்தர் நிர்மலா தேவி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement