மாணவர்களுக்கு பாராட்டு

டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் சமீராபானு 496, திரிநேத்ரா 494, சக்திபிரியா மற்றும் கமலேஷ் 492 மதிப்பெண்கள் பெற்றனர்.

அறிவியல் பாடத்தில் 13 பேர், சமூக அறிவியலில் 3 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றனர். பிளஸ் 2ல் மாணவி தீக் ஷா 594, ஆகாஷ் 582, சுவஸ்திகா 577 மதிப்பெண்கள் பெற்றனர்.

550க்கு மேல் 17 மாணவர்கள், 500க்கு மேல் 35 பேர், 400க்கு மேல் 33 பேர் மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 2 பேர், கணினி அறிவியலில் 3 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.

இவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர். 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement