திருவாலவாயநல்லுாரை பஸ்கள் புறக்கணிப்பதேன்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுாருக்கு இயக்கப்படும் பஸ்கள் சரியாக வந்து செல்வதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து செந்தில்குமார் என்பவர் கூறியதாவது: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவாலவாயநல்லுாருக்கு தடம் எண் 30 சி என்ற பஸ் இயக்கப்படுகிறது.ஒரு நாளில் 4 முறை இயக்கப்பட வேண்டும். ஆனால் 2 அல்லது 3 முறை மட்டுமே வருகிறது. அதுவும் திருவாலவாயநல்லுார் நான்கு வழி சாலை சந்திப்பிலேயே திரும்பி விடுகிறது.

சனி, ஞாயிறுகளில் சரியாக வருவதில்லை. இறங்குவதற்கு ஆட்கள் இருந்தால் மட்டுமே ஊருக்குள் வருகிறது. இதனால் மக்கள் நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டி உள்ளது. நான்கு வழிச்சாலையை கடக்க திருவாலவாயநல்லுார் பிரிவில், குறுக்கே பாதை அமைக்க வேண்டும்.

பாதை இல்லாததால் 4 கி.மீ., சென்று அய்யங்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையை கடக்க வேண்டியுள்ளது.இதனால் அரசு பஸ் உட்பட அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் எதிர்புறம் சென்று கடக்கின்றன. இது ஆபத்தான பயணம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Advertisement