அடிப்படை வசதியில்லா அறைக்கு பாதுகாவலரா

வாடிப்பட்டி : பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளம் பஸ் ஸ்டாப்பில் மின் இணைப்பு, தண்ணீர் வசதி இல்லாத பால் ஊட்டும் அறைக்கு பாதுகாப்பு பணியாளரை நியமித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015ல் பஸ்ஸ்டாண்டுகளில் பாலுாட்டும் அறை திட்டத்தை துவக்கி வைத்தார். இவை பெரும்பாலும் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கின்றன. தற்போது தி.மு.க., அரசு உயர்ரக மெத்தை இருக்கை, ஸ்கிரீன், பேன், தண்ணீர் வசதியுடன் ரூ.8 லட்சத்தில் நகர்த்த கூடிய தனி பாலுாட்டும் அறைகளை ஏற்பாடு செய்கின்றனர். இவையும் பூட்டித்தான் கிடக்கின்றன.
பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளம் பஸ் ஸ்டாப் அருகே 4 மாதங்களுக்கு முன் துவக்கிய பால் ஊட்டும் அறைக்கு இன்றுவரை மின் இணைப்பு இல்லை, குடிநீர் தொட்டி அறைக்குள் உள்ளது. அறையை திறந்து, பாதுகாக்க பேரூராட்சி பணியாளர் உள்ளார். இன்றுவரை ஒற்றை இலக்கத்தில் தாய்மார்கள் பயன்படுத்தி உள்ளனர்.
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன் கூறுகையில், ''தண்ணீர், மின்வசதி செய்துதர அறிவுறுத்துகிறேன்' என்றார்.
மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?