பட்டுபோன மரங்களால் விபத்து அபாயம்

தேனி : தேனி நகர் பகுதியில் சில இடங்களில் மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகின்றன. இவற்றை நகராட்சி, மின்வாரியத்தினர் இணைந்து ஆய்வு செய்து, அகற்றிட வேண்டும்.
இந்நகர் பகுதியின் முக்கிய ரோடுகளில் இருபுறம் மரங்கள் ஆங்காங்கே உள்ளன. இவைகள் வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன. வெயில் அதிகரிக்கும் போது, பலருக்கு நிழல் தந்து பயனளிக்கிறது. அதே சமயம் சில இடங்களில் மரங்கள் பட்டு போன நிலையிலும், கீழே விழும் விபத்து அபாய நிலையில் உள்ளன. குறிப்பாக மதுரை ரோட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சொக்கர் தெரு, கே.ஆர்.ஆர்., நகர் காணப்படுகின்றன. மேலும் இவைகள் பட்டுப்போன மரங்கள் தான் என உறுதி செய்து, பின் அகற்றிட வேண்டும். வரும் நாட்களில் கனமழை, காற்றின் காரணமாக பட்டுப்போன மரங்களால் விபத்துக்கள் ஏற்படும் முன் நகராட்சி, மின்வாரிய அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?