வாகனங்களில் சிதறி ரோட்டில் விழும் ஜல்லி கற்களால் பாதிப்பு

ஆண்டிபட்டி : கல்குவாரி, கிரஷ்ஷர்களில் இருந்து வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ஜல்லிக் கற்கள் ரோட்டில் சிதறி விழுவதால் பாதசாரிகள், டூவீலர்கள், வாகனங்களின் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கல்குவாரி, கிரஷ்ஷர் யூனிட்கள் செயல்படுகின்றன. உடை கற்கள், ஜல்லிக் கற்கள் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் ஆண்டிபட்டி வழியாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. கற்களை வாகனங்களில் குவியலாக்கி கொண்டு செல்லும் போது, மேடு பள்ளங்களில் வாகனங்கள் குலுங்கி குலுங்கி செல்கின்றன. அப்போது கற்கள் சிதறி ரோட்டில் விழுகின்றன. வளைவான ரோட்டில் அதிக அளவில் விழும் கற்கள், அதிகமாக தேங்கி விடுகிறது. இதனால் டூவீலர்கள், வாகனங்கள் உள்பட கனரக வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. திறந்த நிலையில் குவியலாக ரோட்டில் சிதறும் படியாக கற்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மீது போலீசார், கனிம வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?