பட்டா வாங்க முடியாமல் பரிதவிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா
கம்பம் : நகராட்சிகளில் வீடுகளுக்கு பட்டா வாங்க விண்ணப்பிக்கும் பொது மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். பணியில் உள்ள சர்வேயர்களை 'திருப்தி' படுத்த முடியாமல், புலம்பி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் வருவாய்த்துறை நத்தத்தில் அதாவது அனைத்து குடியிருப்புகளுக்கும் உள்ள வீடுகளுக்கு தனித்தனி சர்வே எண்கள் தருவதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இப்பணிகள் துவங்கி ஓராண்டிற்கு மேலாகி விட்டது. நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி சர்வே எண் வழங்குவதே இந்த பணியின் நோக்கமாகும். இந்த பணிகளின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஆன்லைனில் தன்னுடைய வீட்டின் பத்திரத்தை, பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை சரிபார்த்து புதிய சர்வே எண், பட்டாவுடன் வழங்க சம்பந்தப்பட்ட சர்வேயர் பரிந்துரைப்பார். அவரது பரிந்துரையை ஏற்று, உத்தமபளையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள செட்டில்மெண்ட் தாசில்தார் தனி பட்டா வழங்க உத்தரவிடுவார். மாவட்டம் முழுவதும் பட்டா பெறுவதற்காக பொது மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அவர்களை 'திருப்தி' படுத்தினாலும், ஒரு முறைக்கு பத்து முறை அலைய விட்டு, குறைந்தது 3 மாதங்கள் கழித்து பட்டாக்கள் வழங்கப்படுவது தொடர்கிறது. அனைத்து ஊர்களிலும் இதற்கென பல இடைத்தரகர்கள் உள்ளனர்.
குறிப்பாக கம்பம், தேனியில் விண்ணப்பித்த பலர், பட்டா பெற முடியாமல் வேதனையுடன் புலம்பி தவிக்கின்றனர்.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் இப்பணிகளில் கவனம் செலுத்தி, மாவட்டம் முழுவதும் நகராட்சிகளில் குறிப்பாக கம்பம், தேனி நகராட்சிகளில் பொது மக்களுக்கு தடங்கல் இன்றி பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?