நீர் மோர் வழங்கல்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் ம.நீ.ம., சார்பில் பஸ் ஸ்டாண்ட் முன்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா நடந்தது. சோழவந்தான் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் விமல் ராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ரவி, ஜெயபிரகாஷ், பேரூர் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி, சர்பத் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Advertisement