கோடை மழைக்கு அதிகரிக்கும் நோய்கள் ' மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்
மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கோடை மழையால் ஏராளமானோருக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை,இளையான்குடி,திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கடந்த 2நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
மழைக்கால மாற்றத்தினால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல், காய்ச்சல், போன்ற நோய்கள் பரவி வருகிறது.மேலும் சமைத்த உணவுகள் சீக்கிரமே கெட்டுப் போவதினால் அதனை உண்பவர்களுக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி,பேதி போன்ற நோய்களும் ஏற்படுகிறது.
இதற்காக சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் மானாமதுரை, இளையான்குடியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளன.
அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களின்றி நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது,
வெயில் காலத்தில் மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து கொசுக்கள் உருவாகாமல் இருக்க கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும் கெட்டுப் போன உணவுகளை தவிர்க்க வேண்டும், என்றனர்.
மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?