சூதாடிய 5 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, ஏரிக்கரையில் சூதாடிய, 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன், ஜி.அரியூர் ஏரிக்கரை, முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அம்மன் கொல்லைமேடு சேஷி மகன் மூர்த்தி, 27; அய்யனார் மகன் சின்னராசு, 28; ராமச்சந்திரன் மகன் சர்க்கரை, 45; துரைசாமி மகன் மகாதேவன், 30; தண்டபாணி மகன் ரஞ்சித், 27; ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement