பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் சாதனை

நடுவீரப்பட்டு,: பண்ருட்டி நியூ ஜான்டூயி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு
பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
பள்ளி அளவில் மாணவிகள் ஜெனிஸ் சஹிரா, தானுஜா 494 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் கீர்த்தனா, ஷாத்விகா 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி மோனிஷா 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.
490 மதிப்பெண்களுக்கு மேல் நான்கு மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும்,450 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும்,400 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் ஐந்து மாணவர்களும், தமிழில் 99மதிப்பெண்கள் ஒரு மாணவரும், கணிதத்தில் நூற்றுக்கு நூறு ஒரு மாணவரும், அறிவியலில் நூற்றுக்கு நூறு மூன்று மாணவர்களும் சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு ஐந்து மாணவர்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும், முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் வீரதாஸ், மூத்த முதல்வர் வாலண்டினா லெஸ்லி , இணைச் செயலாளர் நித்தின் ஜோஸ்வா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் பள்ளியின் முதல்வர் உமா சம்பத்,தலைமை ஆசிரியர் பாலு சாதனை படைத்த அனைத்து மாணவர்களையும் வாழ்த்தி பாராட்டினர்.
மேலும்
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?
-
அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; மத்திய அரசு தயார்