அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்

தர்மபுரி: அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன, தி.மு.க., நிர்வாகிகளை நீக்கி, கட்சி பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் பற்றி எரிகிறது.
தர்மபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, தர்மபுரி, பென்னா-கரம் தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தி.மு.க.,வில் வாய்ப்பளிக்காமல், பாலக்கோடு தொகுதியை சேர்ந்த தர்மபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளரும், எம்.பி.,.யுமான மணி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த கிழக்கு மாவட்ட, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வைத்தியலிங்கம், அஜ்ஜனஹள்ளி ஊராட்சி ஓரப்பாச்சியூர் கிளை லோகநாதன் ஆகியோர், சமூக வலைதளத்தில், 'கோ பேக், எம்.ஆர்.கே., கோ பேக், தேவ் ஆனந்த்' என பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சி மேலிடம், நான்கு பேரையும் அதிரடியாக நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியதாவது: நான், 40 ஆண்டுகால கட்சிக்காரன். 1984 ஜூன் முதல் கட்சியில் இருந்து வருகிறேன். இதற்கு எம்.பி., மணி மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வமே காரணம். இன்பசேகரன் கூட மாவட்ட செயலாளராக இருந்தார். அவர் விமர்சனத்தை பொறுத்துக்கொண்டார். எம்.பி., மணியால் விமர்ச-னத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.







மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?