கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் 10ம் வகுப்பு பொதுதேர்வில் சாதனை

ஈரோடு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கோபி அருகே தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 21வது ஆண்டாக தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

பள்ளி மாணவி ரிதன்யா, 496 மதிப்பெண்களுடன் முதலிடம், பரணிதர்ஷினி, 494 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், மாணவர் ஸ்ரீஹரன், 493 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றனர்.

ஆங்கிலத்தில் ஆறு பேரும், கணிதத்தில் ஐந்து பேரும், அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தலா, 14 மாணவர்களும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 491 முதல் 495 மதிப்பெண்களுக்கு மேல், 10 பேரும், 486 முதல் 490 வரை 12 பேரும், 485 மதிப்பெண் வரை 15 பேரும், 480 வரை 16 பேரும், 475 வரை 24 பேரும் மதிப்பெண் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியரை முன்னாள் அமைச்சர் கருப்பணன், கல்வி நிறுவனங்களின் செயலாளர் கெட்டிமுத்து, இயக்குனர்கள் முருகுசாமி, செங்கோட்டையன், ஜோதிலிங்கம், ராசு என்கிற மோகனசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

Advertisement