மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
விருத்தாசலம்: மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி உமாதேவி, 22; . இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், ஒரு மகன், மகள் உள்ளனர். தினேஷ் கடந்த ஓராண்டாக உமாதேவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்தார்.
கடந்த 15ம் தேதி வரதட்சணை கேட்டு உமாதேவியிடம் மீண்டும் பிரச்னை செய்ததால் மனமுடைந்த அவர், துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
உமாதேவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சிவசங்கர் அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.
-
சர்க்கஸ் ஒட்டகம் திருட்டு; ஓட்டிச்சென்றவருக்கு வலை
-
குவாரியில் கற்கள் சரிந்து விபத்து; தொழிலாளர் 5 பேர் பலி
-
நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்
-
அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!