கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி

ஈரோடு, ஈரோடு குப்பக்கவுண்டன்பாளையம் கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி எஸ்.நித்யாஸ்ரீ, 583 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். பள்ளி தாளாளர் சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டி கேடயம் வழங்கி வாழ்த்தினர்.

மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல், 61 சதவீத மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 13 சதவீத மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர். பாட வாரியாக மாணவர்கள் பெற்ற முதல் மதிப்பெண் தமிழ் பாடத்தில்-99, ஆங்கிலத்தில்-99, கணினி அறிவியல் மற்றும் கணினிப்பயன்பாடு பாடங்களில் தலா, 100 மதிப்பெண், வணிகவியல் பாடத்தில்-99, கணக்கு பதிவியலில்-97 மதிப்பெண்ணும் பெற்றனர். பள்ளியில் நடப்பாண்டு 2025-26 கல்வியாண்டுக்கு எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சேர்க்கை நடந்து வருகிறது.

Advertisement