பார்க்கிங் இடம் இல்லை என்றால் கார் பதிவு கிடையாது: மஹா. அரசு கறார்

15

மும்பை: வாகன நிறுத்த இடத்துக்கான சான்றிதழ் இல்லாவிட்டால் புதிய கார்கள் பதிவு செய்யப்படாது என்று மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.



மஹாராஷ்டிராவில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகம். அதன் காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மும்பை பெருநகர பகுதியில் வாகனங்கள் நிறுத்தவே இடம் இல்லாத சூழல் காணப்படுகிறது.


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த வாகன நிறுத்த கொள்கையை செயல்படுத்த மஹாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முக்கிய கட்டமாக நகராட்சி கமிஷனர்களுடன், போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆலோசனை நடத்தினார்.


கூட்டத்தில், வாகன நிறுத்த இடத்துக்கான சான்றிதழ் இல்லாவிட்டால் புதிய கார்கள் பதிவு செய்யப்படாது என்று அமைச்சர் பிரதாய் சர்நாயக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது;


வாகன நிறுத்துமிடங்களை நிர்மாணிக்க திட்டமிட்டு உள்ளோம். ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள், வாகன நிறுத்தத்துடன் கூடிய பிளாட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.


வாங்குபவர்களும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையிடம் இருந்து வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கீட்டுக்கான சான்றிதழை பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படாது.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement