தடையின்றி குடிநீர் வினியோகிக்க 450 கே.வி.ஏ.,ல் டிரான்ஸ்பார்மர்

திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள, 33 வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 192 கே.வி.ஏ., மின் இணைப்பு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, ஐந்து மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், ஐந்து மின் மோட்டார்களும்

இயங்க, 390 கே.வி.ஏ., மின்சாரம் தேவைப்படுவதால், நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு தலைமையில், மின்வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி, 450 கே.வி.ஏ., மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 450 கே.வி.ஏ., டிரான்ஸ்பார்மர் அமைத்தால், ஐந்து மின்மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கும். அப்போது, திருச்செங்கோடு நகர மக்களுக்கு கூடுதலாக தடையின்றி காவிரி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என, தெரிவித்தனர்.

Advertisement