கெலவரப்பள்ளி அணையில் 2,200 கன அடி நீர்திற

ப்பு
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஓசூர், மே 20
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 572.90 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 904.49 கன அடியானது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. தென்பெண்ணை ஆற்றில், 706.43 கன அடி, வலது, இடது கால்வாயில் விவசாய பாசனத்திற்காக, 88 கன அடி என, 794.43 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் கனமழையால், நேற்றிரவு, 9:00 மணிக்கு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 2,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால், அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலம் மீது, ரசாயன நுரை தேங்கி, போக்குவரத்து தடைப்பட்டது. ஓசூர், தாசில்தார் குணசிவா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அச்சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை நிறுத்தினர். மேலும், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement