விருதுநகர் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து; பொருட்கள் சேதம்


விருதுநகர்: விருதுநகர் - மதுரை சாலையில் ஈஷா சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இக்கடையில் நேற்று(மே 19) இரவு 11:30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்தில் கடையில் உள்ள விற்பனைப் பொருட்கள் எரிந்து பாழாகியது.

விருதுநகர் கே.ஆர்., கார்டனை சேர்ந்தவர் ராமபிரான். இவருக்கு சொந்தமான ஈஷா சூப்பர் மார்க்கெட் கடையை நேற்று இரவு 10:30 மணிக்கு ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இரவு 11:30 மணிக்கு கடை உள்ளே மின் கசிவால் தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்தது. தீ முன்னெச்சரிக்கை அலாரம் சப்தம் எழுப்பியதால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் , போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
Latest Tamil News
இக்கடையின் அருகேயுள்ள தனியார் வங்கியின் தீ முன்னெச்சரிக்கை அலாரமும் சப்தம் எழுப்பியதால் தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மளிகை பொருட்கள், கணினிகள், பில்லிங் மிஷின்கள் சேதமாகின. போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் எஸ்.பி., கண்ணன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சந்திர குமார் ஆய்வு செய்தனர்.

Advertisement