தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்

தேனி :தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் கழிவு நீர் சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. பணி நடைபெறும் பகுதியில் அறிவிப்பு பலகை, எதிரொலிப்பான்கள் இல்லாதததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தேனி - மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.96 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. தேனி சார்நிலைக் கருவூலம் அருகே சர்வீஸ் ரோடு ஓரத்தில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிநடக்கும் பகுதியில் எந்த வித தடுப்புகள், அறிவிப்பு பதாகைகள், எதிரொலிப்பான்கள் இல்லை. இப் பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாததால் இரவில் பயணிப்போர் சாக்கடை அமைக்கும் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.இதே பகுதியில் ஒரு மாதத்திற்கு முன் இரவில் நடந்த டூவீலர் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள், எதிரொலிப்பான்கள் வைக்க வேண்டும். இரவில் மின் விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement