புகார் பெட்டி புதுச்சேரி

பொது மக்களுக்கு தொந்தரவு

மணக்குள விநாயகர் கோவில் முன், யாசகர்கள் நின்று கொண்டு பொது மக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்.

சுந்தரேசன், புதுச்சேரி.

தெரு விளக்கு எரியுமா?

கருவடிக்குப்பம் பாரதி நகர், விரிவு ஜெயராம் கார்டனில் ஒரு வாரமாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

கல்யாணசுந்தரம், ராஜ்பவன்.

காலி மனையில் புதர்

காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 3வது குறுக்கு தெருவில் காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பாம்புகள் நடமாட்டம் உள்ளன.

ராஜ், ரெயின்போ நகர்.

Advertisement