மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேசிய கொடி வெற்றி ஊர்வலம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் ராணுவ வீரர்கள், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் தேசிய கொடி வெற்றி ஊர்வலம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றிகரமாக நடத்திய ராணுவ வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய கொடி வெற்றி ஊர்வலம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நடந்தது.

கூனிச்சம்பட்டு ஐயனாரப்பன் கோவில் அருகே துவங்கிய தேசிய கொடி வெற்றி ஊர்வலத்தை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

பா.ஜ., பிரமுகர் முத்த ழகன், வர்த்தக அணி மாநில தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பா.ஜ., மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூனிச்சம்பட்டு, ஐயனாரப்பன் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம், மணலிப்பட்டு பாதை, திருக்கனுார் பஜார் வீதி, வணிகர் வீதி வழியாக முத்து மாரியம்மன் கோவில் அருகே முடிவடைந்தது.

Advertisement