5 பேரிடம் ரூ.4.78 லட்சம் 'அபேஸ்'

புதுச்சேரி : சென்னையை சேர்ந்த நபர் ஒருவர், புதுச்சேரியில் தங்குவதற்கு ஓட்டல் குறித்த விவரங்களை ஆன்லைனில் தேடினார். தனியார் ஓட்டல் இணையத்தில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டார்.

மறு முனையில் பேசிய நபர், அறையை முன்பதிவு செய்ய பணம் செலுத்துமாறு கூறினார். இதைநம்பி அவர், 68 ஆயிரத்து 600 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

கூடப்பாக்கத்தை சேர்ந்த நபர், ஆன்லைனில் மளிகை பொருள் விற்பனை விளம்பரத்தை பார்த்து, அதில், இருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து, கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட்டார். அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 ரூபாய் எடுக்கப்பட்டது.

உழவர்கரையை சேர்ந்த பெண் 99 ஆயிரம், முத்திரையார்பாளையம் நபர் 1 லட்சத்து 76 ஆயிரத்து 300, பாகூர் நபர் 11 ஆயிரத்து 400 ரூபாய் என 5 பேர், 4 லட்சத்து 78 ஆயிரத்து 200 ரூபாய் இழந்துள்ளனர்.

புகார்களின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement